(எம்.மனோசித்ரா)
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீன ஜனாதிபதி சீ ஜிங் பின்னுடன் தொலைபேசி உரையாடலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை. எவ்வாறிருப்பினும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் இடையறாத பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங்கிற்கும் இடையில் தொலைபேசி உரையாடலை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் இன்று (07) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கடன் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் சீனாவுடன் இடையறாத பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
No comments:
Post a Comment