இலங்கையர்கள் தொடர்பில் அறிய, அறிவிக்க துருக்கி தூதரகத்தினால் தொலைபேசி இலக்கங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 7, 2023

இலங்கையர்கள் தொடர்பில் அறிய, அறிவிக்க துருக்கி தூதரகத்தினால் தொலைபேசி இலக்கங்கள்

றிஸ்வான் சேகு முஹைதீன் 

துருக்கியில் இடம்பெற்ற பூகம்பத்தை அடுத்து, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை தெரிந்து கொள்ள அல்லது அவர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் தொடர்பு இலக்கங்களை அறிவித்துள்ளது.

அதற்கமைய, துருக்கிய தூதரகத்தை பின்வரும் அவசர தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாமென, அங்குள்ள தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

+903124271032
+905344569498

துருக்கியில் 270 இலங்கையர்கள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அனர்த்தம் இடம்பெற்ற அப்பகுதியில் உள்ள ஏனைய 13 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூதரகத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், அனர்த்த பிரதேசத்தில் இருந்த பெண் ஒருவர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும், அவரது கையடக்கத் தொலைபேசி ஒரு இடத்தில் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்த துருக்கிக்கான இலங்கை தூதுவர், அவர் பாதுகாப்பாக ஏதேனும் இடத்தில் இருப்பார் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment