தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸினால் சமர்ப்பிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இத்தீர்மானம் திருமதி சார்ள்ஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பீ.எஸ்.எம் சார்ள்ஸ் கடந்த ஜனவரி 25ஆம் திகதி தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும், ஜனாதிபதிக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் குறித் விடயம் தொடர்பில் ஊர்ஜிதப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது அவரது இராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment