நாளை இடம்பெறவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுக்கு இடையூறு விளைப்பதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதற்கமைய, தேசிய சுதந்திரதினக் கொண்டாட்டம் இடம்பெறும் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்குள் இடையூறு விளைவிக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தனிநபர்கள் நுழைவதைத் தடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முன்னிலை சோசலிச கட்சி பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு, ஏனைய நபர்கள் குறித்த பகுதிகள்குள் நுழைவோருக்கு எதிராக இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment