இந்தோனேசியாவில் இலங்கை வர்த்தகர் சடலமாக மீட்பு : மனைவியும், பிள்ளையும் அடையாளம் தெரியாத பிரேசில் பெண்மணியும் மாயம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 6, 2023

இந்தோனேசியாவில் இலங்கை வர்த்தகர் சடலமாக மீட்பு : மனைவியும், பிள்ளையும் அடையாளம் தெரியாத பிரேசில் பெண்மணியும் மாயம்

இலங்கையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒனேஸ் சுபசிங்க இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரின் பிரேசில் மனைவியும் பிள்ளையும் அடையாளம் தெரியாத பிரேசில் பெண்மணியொருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதியாக இவர்கள் சுபசிங்க தங்கியிருந்த தொடர்மாடியிலிருந்து வெளியேறிச் செல்வதை சிசிடிவிகள் காண்பித்துள்ளன.

சுபசிங்கே தனது பிரேசில் மனைவி நான்கு வயது பிள்ளையுடனும் இந்தோனேசியாவிற்கு சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இவர்களுடன் அடையாளம் தெரியாத பிரேசில் பெண்மணியொருவரும் சென்றிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேசில் பெண்ணொருவரை சுபசிங்க குடும்பத்தினர் ஜகார்த்தா செல்வதற்கு முன்னர் கொழும்பில் சந்தித்துள்ளனர்.

சுபசிங்க இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளார்.

எனினும் பின்னர் அவர் தொடர்பு கொள்ளாததை தொடர்ந்து சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவர் தங்கியிருந்த தொடர் மாடியின் முகாமையாளர்களை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.

எனினும் சுபசிங்கவை தொடர் மாடியின் முகாமையாளர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் சுபசிங்க தங்கியிருந்த தொடர்மாடிக்கு சென்றுள்ளனர். ஒரு அறை மூடியிருந்ததை அவர்கள் அவதானித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே அவர்கள் வீட்டை உடைத்து திறக்க தீர்மானித்துள்ளனர். அங்கு அவர்கள் சுபசிங்கவின் உடலை பார்த்துள்ளனர்.

சுபசிங்க தங்கியிருந்த வீட்டிலிருந்து அவரது மனைவியும் பிள்ளையும் பிரேசில் பெண்ணும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற அறிவிப்பை காட்சிப்படுத்திய பின்னர் வெளியேறி செல்வதை சிசிடிவிகள் காண்பித்துள்ளன.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற சுபசிங்கவின் குடும்பத்தவர்கள் அவரின் மனைவியும் பிள்ளையும் அடையாளம் தெரியாத பிரேசில் பெண்ணும் இந்தோனேசியாவிலிருந்து வெளியேறியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

மூவரும் டோஹா விமானத்தில் இந்தோனோசியாவிலிருந்து வெளியேறியுள்ளனர் அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பது இதுவரை தெரியவில்லை.

No comments:

Post a Comment