பாதையை வெட்டி தேர்தல் பிரசாரத்திற்கு தடங்கல் : முறியடித்த இ.தொ.கா. - News View

About Us

About Us

Breaking

Monday, February 6, 2023

பாதையை வெட்டி தேர்தல் பிரசாரத்திற்கு தடங்கல் : முறியடித்த இ.தொ.கா.

ஹெரமிட்டிகல தோட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு செல்வதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பதாக குறித்த தோட்டத்திற்கு அண்மையில் உள்ள கிராமத்தை சேர்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் தமது பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்காக பாதையை உடைத்து வாகனம் செல்ல தடை செய்ததாகவும் அதனை முறியடித்து வெற்றிகரமாக மக்கள் சந்திப்பை நடத்தியதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இ.தொ.கா, எமது மக்களை சந்திப்பதற்கு எந்தவித தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாம் ஒருபோதும் அஞ்சியது கிடையாது.

எமது பிரசாரத்தை தடுக்க எடுத்த முயற்சிகளை தோற்கடித்து மறுபக்கத்தில் இருந்து முச்சக்கர வண்டியொன்றை வரவழைத்து மக்களை சென்று சந்தித்ததுடன் கடந்த காலத்தைவிட எதிர்காலத்தில் அதிகமான சேவைகளை இ.தொ.கா. முன்னெடுக்குமென மக்களிடம் தெரிவித்தோம் எனவும் இ.தொ.கா. கூறியுள்ளது.

No comments:

Post a Comment