கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துன்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (05) இரவு துபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்ககளத்தின் கணனி பிரிவுக்கு அழைத்து வரப்பட்டதோடு, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அதன் பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவருக்கு பிணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அவரை ரூ. 2 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலிண கமகே உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த வழக்கை எதிர்வரும் மே 17ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்வதற்கான உத்தரவ நீதவான் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment