இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 2, 2023

இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர்

(நா.தனுஜா)

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பௌட்யால் நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு வருகை தரவுள்ள நேபாள வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌட்யால், சனிக்கிழமை (04) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வார்.

அதுமாத்திரமன்றி நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டுள்ள அவர், வெள்ளிக்கிழமை (03) ஜனாதிபதி செயலகத்தினால் சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'லங்கார லங்கா' என்ற கலாசார நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ள பிமலா ராய் பௌட்யால், ஜனாதிபதியின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உபசார நிகழ்விலும் பங்கேற்பதோடு ஞாயிறன்று மீண்டும் நேபாளம் திரும்புவார்.

No comments:

Post a Comment