கடவுச்சீட்டு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்தோர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 1, 2023

கடவுச்சீட்டு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்தோர் கைது

கடவுச்சீட்டுகள் தயாரித்து தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் தலங்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் சேவையின் கீழ், கடவுச்சீட்டுகளை தயாரித்து தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெறப்பட்டு பண மோசடி செய்யப்பட்டுள்ளது. 

தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த மூன்று முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நேற்றுமுன்தினம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரிடம் முறைப்பாடு செய்த இருவரின் தேசிய அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. சந்தேகநபரிடமிருந்து தேசிய அடையாள அட்டை, 15,000 ரூபாய் பணம் மற்றும் கடவுச்சீட்டுத் தயாரிக்க பயன்படுத்தப்படும் 09 போலி டோக்கன்கள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 47, 65 வயதுடைய மாலபே மற்றும் கொழும்பு 09 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. 

இவர்களை நேற்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment