அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 8, 2023

அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை

ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கொழும்பு நீதவானால் நேற்று (08) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு அண்மையில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவர் மீதான சகல குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெறுமாறு பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. அதன்படி அவர் நேற்று நீதவானால் விடுதலை செய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களின் அடிப்படையில் அவருக்கெதிராக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் தன்னைக் கைது செய்து, காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானதென்றும், தனது அடிப்படை உரிமை மீறல் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இடைக்கால நடவடிக்கையாக, அவர் ஜனவரி 2022 இல் பிணையில் விடுவிக்கப்பட்டார். தற்போது அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட்டுள்ளார்.

No comments:

Post a Comment