சிறிது நேரம் செயலிழந்து மீண்டும் வழமைக்கு திரும்பிய யூடியூப் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 8, 2023

சிறிது நேரம் செயலிழந்து மீண்டும் வழமைக்கு திரும்பிய யூடியூப்

யூடியூப் செயலியின் முகப்பு புதன்கிழமை செயலிழந்த நிலையில் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அல்பபெட் நிறுவனம் (GOOGL.O)தெரிவித்துள்ளது.

செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை.

"உங்கள் அனைத்து வீடியோ தேவைகளுக்கும் YouTube முகப்புப்பக்கம் வழமைக்கு திரும்பும் என யூடியூப் டுவிட்டரில் தெரிவிந்திருந்தது.
செயலிழப்பு குறித்து அமெரிக்காவில் 60,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் அறிக்கை செய்துள்ளதாக டவுன்டெக்டரின் தரவு காட்டுகிறது.

இதேவேளை, மெட்டா நிறுவனத்தின் (META.O) சமூக ஊடக செயலிகள் மற்றும் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான டுவிட்டர் ஆகியவையும் புதன்கிழமை சிக்கல்களை எதிர்கொண்டன.

மெட்டாவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு செயலிழந்தது, சில டுவிட்டர் பயனர்களால் ட்வீட் செய்ய முடியாமல் போயுள்ளது.

No comments:

Post a Comment