பாடசாலை மாணவர்களுக்கு மார்ச்சுக்குள் சீருடைகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 8, 2023

பாடசாலை மாணவர்களுக்கு மார்ச்சுக்குள் சீருடைகள்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 

எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் கூறுகையில், “மாணவர்களுக்கு தேவையான சீருடைகளில் 70 வீதத்தை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணங்கியுள்ளது.

இதற்கமைய பாடசாலை சீருடைகளின் முதல் தொகுதி சீன அரசாங்கத்தால் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 வீத சீருடைகள், உள்ளூர் தனியார் வணிகர்களால் வழங்கப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment