(இராஜதுரை ஹஷான்)
நாட்டின் நிதி நிலைமையை கருத்திற் கொண்டு தேர்தல் தொடர்பில் அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கட்சி என்ற ரீதியில் எமக்கு கிடையாது. அரசியலமைப்பின் பிரகாரம் காலத்திற்கு காலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஆகவே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்.
நாட்டின் நிதி நிலைமையை கருத்திற் கொண்டு தேர்தல் தொடர்பில் அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது, இது கிராமிய தேர்தல். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கிராமிய பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது. கொவிட் பெருந்தொற்று காலத்தில் பொதுத் தேர்தல் பிற்போடப்பட்டது.
நாடு தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் தேர்தலை நடத்துவது தொடர்பில் சமூகத்தின் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. அனைத்து கருத்துகளுக்கும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்று பின்னணியை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்து அதனுடாக பிரபல்யமடையும் கொள்கையில் இருந்துகொண்டு மக்கள் விடுதலை முன்னணி செயற்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணியின் போலியான குற்றச்சாட்டுக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். வெற்றி, தோல்வி இதனை நாட்டு மக்களே தீர்மானிப்பார்கள் என்றார்.
No comments:
Post a Comment