சதொசவில் 4 பொருட்களின் விலைகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 9, 2023

சதொசவில் 4 பொருட்களின் விலைகள் குறைப்பு


சதொச நிறுவனம் இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

1 கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சை அரிசி ஆகியயன ரூ. 5 இனால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சிவப்பு பச்சை அரிசியின் ரூ. 164 ஆகவும், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சை அரிசி ரூ. 179 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோ உள்நாட்டு வெள்ளை நாட்டரிசி ரூ. 180 ஆக ரூ. 4 இனால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் வடை பருப்பு ரூ. 305 ஆக, ரூ. 10 இனால் குறைக்கப்பட்டுள்ளது.

1kg சிவப்பு பச்சை அரிசி ரூ. 5 குறைப்பு - ரூ. 164
1kg வெள்ளை பச்சரிசி இறக்குமதி : ரூ. 5 குறைப்பு - ரூ. 179
1kg உள்நாட்டு நாட்டரிசி : ரூ. 4 குறைப்பு - ரூ. 180
1kg வடை பருப்பு : ரூ. 10 குறைப்பு - ரூ. 305

No comments:

Post a Comment