குருணாகல் நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவனை சேர்ப்பதற்காக மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற முயற்சித்த ஆசிரியர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பாடசாலையின் உயர்தர கலைப் பிரிவுக்கு பொறுப்பான தலைமை ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவனை உயர்தர கலைப் பிரிவில் சேர்ப்பதற்காக, சந்தேகநபரான ஆசிரியர், மாணவனின் தந்தையிடம் மூன்று இலட்சம் ரூபா கோரியுள்ளார்.
இது தொடர்பாக மாணவனின் தந்தை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து, குருணாகல் நகருக்கு இலஞ்சப் பணத்தை ஆசிரியரிடம் கொடுப்பதற்காக வருமாறு கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் பணம் கொடுக்க முற்பட்டபோது சந்தேகத்திற்குரிய ஆசிரியர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் குருணாகல் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment