துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது அமெரிக்கக் கப்பல் 1500 கொள்கலன்களுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட குழுவினரால் அக்கப்பல் உத்தியோகபூர்வமாக வரவேற்கப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தில் புதிய கப்பல் வர்த்தக சேவையை ஆரம்பித்து வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னேற்றும் வகையில் முதலாவது கப்பலான எம்.எஸ்.சி. அமெரிக்கா’ நேற்று வர்த்தக ரீதியாக முதல் தடவையாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ளும் வகையிலும் கப்பல் மூலமான வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றும் ஒரு அம்சமாகவும் துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சு, துறைமுக அதிகார சபை CICI முனையம், SAGI முனையம், இலங்கை கப்பல் முகவர் சங்கம், கப்பல் உரிமையாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து இந்த திட்டத்தை தயாரித்துள்ளதுடன் அதன் மூலம் தொடர்ச்சியாக கொழும்பு துறைமுகத்துக்கு கப்பல்களை வரவழைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள எம்.எஸ்.சி. அமெரிக்க கப்பல் பிரதி வாரமும் ஒரு தடவை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது.
இம்முறை 1500 கொள்கலன்களுடன் துறைமுகத்தை வந்தடைந்துள்ள மேற்படி கப்பல் வாராந்தம் இடம்பெறும் கப்பல் போக்குவரத்தின் போது 2000 கொள்கலன்களை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க கப்பலின் நீளம் 334 மீற்றராகவும் ஆழம் 7.5 மீற்றராகவும் அமைந்துள்ளதாகவும் அந்தக் கப்பல் சிங்கப்பூர் ஊடாக தென்னாபிரிக்காவை நோக்கி செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எம்.எஸ்.சி. கப்பல் நிறுவனம் உலகின் பாரிய கப்பல் சேவை நிறுவனமாக காணப்படுவதுடன் அந்த நிறுவனத்தின் 775 கப்பல்கள் உலகம் பூராவும் பொருட்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்மையும் குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ்.வெல்வநாயகம்
No comments:
Post a Comment