ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 8, 2023

ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு

கொழும்பில் பல்வேறு தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, கொழும்பு கோட்டை பகுதியில் பல வீதிகள் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளன.

அதற்கமைய, கொழும்பு கோட்டை, ஒல்கொட் மாவத்தையின் கொழும்பிலிருந்து வெளியேறும் பாதை, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் லோட்டஸ் வீதியை பொலிஸார் மூடியுள்ளனர்.

அரசாங்கத்தின முறையற்ற வகையிலான வரி விதிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், இன்றையதினம் (08) வைத்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு மற்றும் பேரணி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment