யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலா் பல விற்குட்பட்ட வலி, வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.
பலாலி - அந்தனிபுரத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ். மாவட்ட இராணுவ தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட யாழ். மாவட்டச் செயலர் அம்பலவாணனர் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளார்.
காங்கேசன்துறை - மத்தி (ஜே 234) - 50.59 ஏக்கர், மயிலிட்டி - வடக்கு (ஜே 246) - 16.55 ஏக்கர், தென்மயிலை (ஜே 240) - 0.72 ஏக்கர், பலாலி - வடக்கு (ஜே 254) - 13.033 ஏக்கர், நகுலேஷ்வரம் (ஜே 226) -28 ஏக்கர் மேற்படி கிராம சேவகர் பிரிவுகளில் மொத்தமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி மிக நீண்ட காலத்தின் பின்னர் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன.
மேலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ள 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியாகும் இந்த காணி யாழ். வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. மொத்தமாக 205 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.
மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
இன்றைய நிகழ்வில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், மற்றும் வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மற்றும் அதிபரின் செயலாளர் இ.இளங்கோவன், பிரதம செயலாளர், யாழ்.மாவட்டச் செயலர், யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பழை பிரதேச செயலர் மற்றும் பொதுமக்கள், படையிர், காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment