ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய இளைஞனுக்கும் யுவதிக்கும் தலா 10 வருட சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமீர் மொஹம்மத் அஹ்மதி எனும் இளைஞருக்கும் அவரின் எதிர்கால மனைவியான அஸ்தியாஸ் ஹகீகி எனும் யுவதிக்குமே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும், கடந்த நவம்பர் மாதம் தெஹ்ரானிலுள்ள பிரசித்தி பெற்ற ஆஸாதி கோபுரத்துக்கு முன்னாள் நடனடிமாடியிருந்தனர். இவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைத்ளதங்களில் வைரலாகியிருந்தது.
இந்நடனத்தின்போது, அஸ்தியாஸ் ஹகீகி ஹிஜாப் அணிந்திருக்கவில்லை. ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் பொது இடங்களில் நடனமாவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வீடியோ வெளியானதையடுத்து அவ்விருவரும் கைது செய்ப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் தலா 10 வருடங்கள் மற்றும் 6 மாத சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது.
No comments:
Post a Comment