வெளியானது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

வெளியானது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி, காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38/1/A சரத்திற்கு அமைவாக, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

24 தேர்தல் மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான 24 வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், தனித்தனியாக அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, நாட்டின் 25 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்தல் இடம்பெறும் மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளின் பெயர்களை குறிப்பிட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு சில சபைகள் தொடர்பில் இடம்பெற்று வரும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவற்றின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபை மற்றும் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைகளை தவிர்த்து நாடளாவிய ரீதியில் உள்ள 339 உள்ளூர் அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

எல்பிடிய பிரதேச சபை
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்றது. இருப்பினும் காலி மாவட்டம் எல்பிடிய அதிகார சபைக்கான தேர்தல் அப்போது இடம்பெறவில்லை. 2019.10.10 ஆம் திகதி எல்பிடிய பிரதேச சபைத் தேர்தல் இடம்பெற்றது.

2022.03.20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டதை தொடர்ந்து இதற்கமைய ஏனைய உள்ளூராட்சி மன்றங்களை காட்டிலும் எல்பிடிய பிரதேச சபையின் பதவிக் காலம் மேலதிகமாக நீடிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபையை தவிர்த்து ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பை கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு 2022.12.29 தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

 கல்முனை மாநகர சபை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கல்முனை மாநகர சபையின் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு கடந்த மாதம் 19 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை நீடிக்கப்பட்டது. கல்முனை விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2317/022023-01-30Elections Commission - Notice for Local Authorities in Colombo DistrictE | සි 
2317/032023-01-30Elections Commission - Notice for Local Authorities in Gampaha DistrictE | සි 
2317/042023-01-30Elections Commission - Notice for Local Authorities in Kalutara DistrictE | සි 
2317/052023-01-30Elections Commission - Notice for Local Authorities in Kandy DistrictE | සි 
2317/062023-01-30Elections Commission - Notice for Local Authorities in Matale DistrictE | සි 
2317/072023-01-30Elections Commission - Notice for Local Authorities in Nuwara Eliya DistrictE | සි 
2317/082023-01-30Elections Commission - Notice for Local Authorities in Galle DistrictE | සි 
2317/092023-01-30Elections Commission - Notice for Local Authorities in Matara DistrictE | සි 
2317/102023-01-30Elections Commission - Notice for Local Authorities in Hambantota DistrictE | සි 
2317/112023-01-30Elections Commission - Notice for Local Authorities in Jaffna DistrictE | සි 
2317/122023-01-30Elections Commission - Notice for Local Authorities in Killinochchi DistrictE | සි 
2317/132023-01-30Elections Commission - Notice for Local Authorities in Mannar DistrictE | සි 
2317/142023-01-30Elections Commission - Notice for Local Authorities in Vavuniya DistrictE | සි 
2317/152023-01-30Elections Commission - Notice for Local Authorities in Mullativu DistrictE | සි 
2317/162023-01-30Elections Commission - Notice for Local Authorities in Batticaloa DistrictE | සි 
2317/172023-01-30Elections Commission - Notice for Local Authorities in Ampara DistrictE | සි 
2317/182023-01-30Elections Commission - Notice for Local Authorities in Trincomalee DistrictE | සි 
2317/192023-01-30Elections Commission - Notice for Local Authorities in Kurunegala DistrictE | සි 
2317/202023-01-30Elections Commission - Notice for Local Authorities in Puttalam DistrictE | සි 
2317/212023-01-30Elections Commission - Notice for Local Authorities in Anuradhapura DistrictE | සි 
2317/222023-01-30Elections Commission - Notice for Local Authorities in Polonnaruwa DistrictE | සි 
2317/232023-01-30Elections Commission - Notice for Local Authorities in Badulla DistrictE | සි 
2317/242023-01-30Elections Commission - Notice for Local Authorities in Monaragala DistrictE | සි 
2317/252023-01-30Elections Commission - Notice for Local Authorities in Rathnapura DistrictE | සි 
2317/262023-01-30Elections Commission - Notice for Local Authorities in Kegalle DistrictE | සි 

No comments:

Post a Comment