பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் டொலர்களை வழங்கும் IMF - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் டொலர்களை வழங்கும் IMF

இலங்கைக்கு பின்னர் அலுவலக மட்ட இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொண்ட பங்களாதேஷூக்கு சர்வதேச நாணய நிதியம் முதலாவது கடன் தவணையை இன்று விடுவித்தது.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அலுவலக மட்ட இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொண்டது.

பங்களாதேஷ் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி IMF உடன் அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

பங்களாதேஷூக்கு 4.7 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக  சர்வதேச நாணய நிதியம் இன்று அறிவித்தது.

அதன் முதலாவது தவணையாக பங்களாதேஷ் அரசுக்கு உடனடியாக 476 மில்லியன் டொலர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு இது உதவும் என நம்பப்படுகிறது.

எனினும், இது வரி அதிகரிப்பு மற்றும் வங்கித் துறையில் மீட்கப்பட முடியாத கடன்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள வைக்கும்.

கடந்த வருடம் பங்களாதேஷில் ஒரு நாளில் 13 மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் உத்தியோகபூர்வ பண வீக்கம் 8.7 சதவீதமாக உள்ளது. எனினும் உண்மையான வீதம் மேலும் அதிகமாக இருக்கலாம் என சுயாதீன பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment