பேராதனை மாணவர் சங்க இன்னாள், முன்னாள் தலைவர்கள் இடை நிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 27, 2022

பேராதனை மாணவர் சங்க இன்னாள், முன்னாள் தலைவர்கள் இடை நிறுத்தம்

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் இருவரது மாணவர் அந்தஸ்து இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளவர்கள் தற்போதைய பிரதான மாணவர் சங்கத் தலைவரும், முன்னாள் தலைவருமாவர் என பல்கலைக்கழக பதில் உபவேந்தர் டெரன்ஸ் மௌஜித் தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், பூகற்பவியல் பேராசிரியருமான அத்துல சேனாரத்தனவையும் அவரது குடும்ப அங்கத்தவர்களையும் தாக்கி அவர்களது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் சட்ட விரோதமாக உட்புகுந்து கலகம் விளைவித்த சம்பவத்திற்கும், மேற்படி இரு மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளதாகக் காணப்பட்தை அடுத்தே பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாணவர் சங்கத் தலைவர் சமோதி சத்சர மற்றும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் அனுராதா விதானகே ஆகியோரது மாணவர் அந்தஸ்த்தே இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் ஏற்கனவே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 12 மாணவர்களும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து ஜனவரி 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment