தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 151 பேரும் இலங்கையை வந்தடைந்தனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 27, 2022

தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 151 பேரும் இலங்கையை வந்தடைந்தனர்

கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் தத்தளித்த நிலையில், காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 303 அகதிகளில் 151 பேர் இன்று (28) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் வியட்நாம் நேரப்படி செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் 5 மணிக்கு ம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் இன்று புதன்கிழமை காலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மியன்மாரில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்குச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்த “ லேடி ஆர் 3 ” என்ற படகு மியான்மாரில் இருந்து தென் கடற்பரப்பு வுங் டாவ் கடற்கரையில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் மூழ்கும் நிலையில் தத்தளித்தது.

இந்நிலையில், அங்கிருந்த ஒருவர் தொலைபேசி ஊடாக இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டதையடுத்து கொழும்பிலுள்ள கடல் சார் ஒருங்கிணைப்பு அவசர முகவரகம் வியட்நாம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடிய நிலையில் அந்த கடற்பகுதியில் இருந்த ஜப்பானிய கொடியேற்றப்பட்ட ஹீலியோஸ் லீடர் கப்பல் அவர்களை காப்பாற்றி வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களை 3 தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்த நிலையில் சர்வதேச புலம்பெயர் அமைப்பான ஐ.எம்.ஓ வின் அனுசரணையுடன் மீண்டும் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த 151 பேரை செவ்வாய்க்கிழமை (27) வியட்நாம் நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு இலங்கைக்கு செல்லும் விமானத்தில் ஏற்றி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் புதன்கிழமை (28) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

No comments:

Post a Comment