குறைகிறது Litro சிலிண்டர்களின் விலைகள் : 05 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல் - News View

About Us

About Us

Breaking

Monday, October 3, 2022

குறைகிறது Litro சிலிண்டர்களின் விலைகள் : 05 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்

விலைச் சூத்திரத்திற்கு அமைய, Litro சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. Litro நிறுவன தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இறுதியாக கடந்த செப்டெம்பர் 06ஆம் திகதி லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.

12.5kg - ரூ. 113 இனால் குறைப்பு (புதிய விலை ரூ. 4,551)
5kg - ரூ. 45 இனால் குறைப்பு (புதிய விலை ரூ. 1,827)
2.3kg - ரூ. 21 இனால் குறைப்பு (புதிய விலை ரூ. 848)

No comments:

Post a Comment