சர்வதேச கிரிக்கட் பேரவையினால் (ICC) வெளியிடப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் புதிய தரப்படுத்தல்களுக்கு அமைய, ரி20 பந்து வீச்சாளர்கள் தர வரிசை பட்டியலில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்க ஒரு இடம் முன்னேறி 3ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
இப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் ஜோஸ் ஹஷல்வூட் முதல் இடத்தில் உள்ளார். 2ஆவது இடதில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீட் கான் இடம்பிடித்துள்ளார்.
இதேவேளை, T20 சகலதுறை ஆட்டக்காரர் தர வரிசையில் வணிந்து ஹசரங்க 4ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் மொஹமட் நபி முதலிடத்திலும், பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹஸன் 2ஆவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் மொயின் அலி 3ஆவது இடதிலும் உள்ளனர்.
ரி20 துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் அணியின் மொஹமட் றிஸ்வான் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
No comments:
Post a Comment