இன்று நள்ளிரவு (02) முதல் பெற்றோல் வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய,
ஒக்டேன் 92 : ரூ. 40 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 410
ஒக்டேன் 95 : ரூ. 30 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 510
ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் - ரூ. 430
சுப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) - ரூ. 510
மண்ணெண்ணெய் - ரூ. 340
தொழிற் பயன்பாட்டு மண்ணெணெண்ணெய் - ரூ. 464
இறுதியாக கடந்த ஓகஸ்ட் 22 முதல் மண்ணெண்ணெய் விலை ரூ. 253 இனால் அதிகரித்து ரூ. 340 ஆக மாற்றப்பட்டிருந்தது.
கடந்த ஓகஸ்ட் 02ஆம் திகதி முதல் டீசல் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு ரூ. 430 ஆக மாற்றப்பட்டிருந்தது.
அதற்கு முன்னதாக கடந்த ஜூலை 17ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் பெற்றோல் மற்றும் டீசல் வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைவாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக ஐ.ஓ.சி. நிறுவனமும் பெற்றோலின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment