நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Saturday, October 1, 2022

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

 
றிஸ்வான் சேகு முகைதீன் 

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு (30) நாடு திரும்பினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி அதிகாலை ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நோக்கி புறப்பட்டிருந்தார். ஜப்பான் சென்றடைந்த அவர், ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் மற்றும் பேரரசருடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

ஜப்பான் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, செப்டெம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது மாநாட்டிற்கு ஜனாதிபதி தலைமை வகித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa) இற்கும் இடையிலான சந்திப்பு செப்டெம்பர் 30ஆம் திகதி இடம்பெற்றதோடு, இதன்போது இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரை முன்வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு (30) நாடு திரும்பியதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment