செயலிழந்த மூன்றாவது மின் பிறப்பாக்கியை இன்று மாலை இணைத்துக் கொள்ள முடியும் - பொறியியலாளர்கள் நம்பிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, October 1, 2022

செயலிழந்த மூன்றாவது மின் பிறப்பாக்கியை இன்று மாலை இணைத்துக் கொள்ள முடியும் - பொறியியலாளர்கள் நம்பிக்கை

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழந்திருந்த மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்று மாலை தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள முடியும் என மின் உற்பத்தி நிலை பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கடந்த 27 ஆம் திகதியன்று இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்ற தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த மூன்றாவது மின் பிறப்பாக்கி செயலிழந்தாகவும், அதன் திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாது இருக்கும் பட்சத்தில் குறித்த மூன்றாவது மின் பிறப்பாக்கியை தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள முடியும்.

மேலும், இதன் மூலமாக 270 மெகா வொட் தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பில் கிடைக்கும் எனவும் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, பராமரிப்பு நடவடிக்கைக மேற்கொள்ளப்பட வேண்டி காரணத்தினால், இரண்டாவது மின் பிறப்பாக்கி இயந்திரம் திருத்தப் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

குறித்த இந்த மின் பிறப்பாக்கி திருத்தப் பணிகள் முடிவவடைந்ததன் பின்னர், எதிர்வரும் 11, 12 ஆம் திகதிகளில் இந்த மின் பிறப்பாக்கி இயந்திரமும் தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment