(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு - கொட்டாவை பிரதேசத்தில் பஸ்களில் பயணிகளுடைய கையடயக்கத் தொலைபேசிகளை திருடும் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்கள் நேற்று (30) குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொட்டாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து குளியலறைகளில் உள்ள பொருட்கள் மற்றும் கொழும்பில் பயணிக்கும் பல்வேறு பஸ்களில் பயணிகளிடமிருந்து அவர்களின் கையடயக்கத் தொலைபேசிகள் திருடிச் சென்ற சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 57 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கொகந்துர மற்றும் கொட்டாவை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சந்தேக நபர்களிடமிருந்து 18 வகையான தொலைபேசிகள் மற்றும் குளியலறை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
No comments:
Post a Comment