(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் நீங்கள் நிகழ்நிலையிலேயே நடத்தினீர்கள். அதனால் நவீன தொழிநுட்பங்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் சபையில் கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றத்தில் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி, லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில், எமது உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கின்றனர். அதனால் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு தலைவர்கள் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தால், நிகழ்நிலை முறையில் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கேட்டுக் கொண்டார்.
அதற்கு சபாநாயகர் அவ்வாறு வாக்களிப்பு நடத்துவதற்கு நிலையியற் கட்டளையில் எந்த ஏற்பாடும் இல்லை. அவ்வாறு இருந்தால் நிலையியற் கட்டளையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதற்கு லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளிக்கையில், நிலையியற் கட்டளையில் அதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன. கைகளை உயர்த்தியும், இலத்திரணியல் அடிப்படையிலும் குரல் வழியாகவும் வாக்களிப்பு நடத்த ஏற்பாடு இருக்கின்றது.
அதேபோன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் நீங்கள் நிகழ்நிலையிலேயே நடத்தினீர்கள். அதனால் நவீன தொழிநுட்பங்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
அதற்கு சபாநாயகர், சபை இணக்கம் தெரிவித்தால் நிகழ்நிலையில் வாக்களிப்பு நடத்த தயார். இது தொடர்பில் எனக்கு தீர்மானிக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment