அரசியலில் நுழையும் எண்ணமில்லை - ரொசான் மகநாம - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 4, 2022

அரசியலில் நுழையும் எண்ணமில்லை - ரொசான் மகநாம

அரசியலில் நுழையும் எண்ணம் எதுவுமில்லை என இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரொசான் மகநாம தெரிவித்துள்ளார்.

நான் அரசியலில் நுழைய வேண்டும் என நினைத்திருந்தால் ஓய்வு பெற்ற உடனேயே நுழைந்திருப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரொசான் மகநாம அரகலயவில் கலந்துகொண்ட பின்னரும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளவர்களிற்கு உணவு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட பின்னரும் அவர் அரசியலில் ஈடுபடவுள்ளார் என்ற ஊகங்கள் உருவாகியிருந்தன.

ஒய்வு பெற்ற பின்னர் அரசியலில் ஈடுபமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டதாகவும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அமைப்பின் மூலம் நாடு தனக்கு வழங்கியதை நாட்டிற்கு திருப்பி கொடுப்பதே தனது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பின்தங்கிய குழந்தைகளின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக தொண்டு நிறுவனமொன்றை ரொசான் மகநாம உருவாக்கியுள்ளார்.

No comments:

Post a Comment