திரிபோஷா தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையின் உண்மைத் தன்மையை பகிரங்கப்படுத்துங்கள் - ஹரினி அமரசேகர சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, October 1, 2022

திரிபோஷா தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையின் உண்மைத் தன்மையை பகிரங்கப்படுத்துங்கள் - ஹரினி அமரசேகர சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை

(இராஜதுரை ஹஷான்)

பிள்ளைகள் மற்றும் தாய்மார்களுக்கு உயர்தரம் வாய்ந்த போசணையான திரிபோஷாவை தொடர்ச்சியாக வழங்க சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. பிள்ளைகளக்கு மேலதிக போசணைகளை வழங்கும் தென்னாசிய நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளது. திரிபோஷாவை தடையின்றி விநியோகிக்க போதுமான மானியத்தை திறைசேரி ஒதுக்கியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

திரிபோஷா தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையின் உண்மையை நாட்டு மக்களுக்கும், உலகத்துக்கும் பொறுப்புடன் சுகாதாரத்துறை அமைச்சு அறிவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்தார்.

திரிபோஷா தொடர்பில் கடந்த நாட்களில் எழுந்த சர்ச்சை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய உள்ளிட்ட தரப்பினர் நேற்று சுகாதாரத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

திரிபோஷா விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. உணவு பணவீக்கத்துக்கு மத்தியில் திரிபோஷாவை தடையின்றி விநியோகிக்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவிக்கையில், போசணையான திரிபோஷா உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஏனைய நிறுவனங்களை காட்டிலும் அரச நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படும் திரிபோஷாக்களில் அதிகளவில் சோளம் சேர்க்கப்படுவதாகவும் அதனால் எப்ளோடொக்ஷினின் வீதம் உயர்மட்டத்தில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் திரிபோஷா உற்பத்திக்காக 66 சதவீதம் சோளம் சேர்க்கப்படுவதுடன், ஏனைய நிறுவனங்கள் அதற்கு பதிலாக மூலப்பொருட்களை சேர்ப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் 50 சதவீதம் சோளம் 50 சதவீதம் அரிசி ஆகியவற்றை சேர்த்து திரிபோஷா உற்பத்தி செய்யப்படும். அதற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்களுக்காக போசணை மிகுந்த பிஸ்கட் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எப்ளோடொக்ஷின் அடங்கிய திரிபோஷாக்கள் கடந்த நாட்களில் மீளப் பெற்றதாக வெளியான செய்தி அடிப்படையற்றதாகும். காலாவதியான திரிபோஷாக்கள்தான் அவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டன என்றார்.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் லக்ஷி சோமதுங்க தெரிவிக்கையில், உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுகாதார சேவை முன்னிலையில் காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு மாதத்தில் நாடளாவிய ரீதியில் ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் நிறை மற்றும் உயரம் மதிப்பிடப்படும். ஒரு சில நாடுகளில் இவ்வாறான தன்மை கிடையாது.

சுகாதாரத்துறை அமைச்சு அறிவியல் ரீதியிலான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்றார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் சுகாதாரத் துறையை சிறந்த சேவையாக உலகம் குறிப்பிட வேண்டுமாயின் சுகாதார சேவை பாதுகாக்கப்பட வேண்டும். விசேடமாக திரிபோஷா தொடர்பிலான உண்மைத் தகவலை நாட்டுக்கும், உலகத்துக்கும் தெளிவுப்படுத்துவது அவசியமானது என்றார்.

No comments:

Post a Comment