இலங்கையில் மருந்து பற்றாக்குறை சத்திர சிகிச்சைகள், ஆய்வுகூட செயற்பாடுகளுக்கு பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

இலங்கையில் மருந்து பற்றாக்குறை சத்திர சிகிச்சைகள், ஆய்வுகூட செயற்பாடுகளுக்கு பாதிப்பு

மருந்து பற்றாக்குறை தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் ஆய்வு கூடங்கள், வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளை பாதித்து வருகின்றது.

லேடி ரிஜ்வே வைத்தியசாலை உட்பட நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் தொடர்ந்தும் அன்டிபயோட்டிக்ஸ் மற்றும் வலி நிவாரணிகள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வாசன் ரட்ணசிங்கம் பஞ்சு போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சில மருத்துவமனைகள் சாதாரண சத்திர கிசிச்சைகள் குறித்து மாத்திரம் கவனம் செலுத்துகின்றன என தெரிவித்துள்ள அவர் சில மருத்துவமனைகள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான சத்திர கிசிச்சைகளை மேற்கொள்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் முற்றாக சத்திர சிகிச்சைகளை ஒத்திவைக்காத அதேவேளை அவர்கள் அவசர சத்திர சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மருந்துகள் விநியோக பிரிவில் போதியளவு பொருட்கள் இன்மையே பற்றாக்குறைக்கு காரணம் என குறிப்பிட்டுள்ள வாசன் ரட்ணசிங்கம் பற்றாக்குறைகள் உள்ளபோதிலும் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை தொடர்ந்தும் இயங்குகின்றது என தெரிவித்துள்ளார்.

நாங்கள் சில வகை மருந்துகளை கேட்டால் அவை மருந்துகள் விநியோக பிரிவில் இல்லாத நிலை காணப்படுகின்றது. ஆனால் நன்கொடைகள் காரணமாக அவை கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியாசாலையில் சில நாட்கள் வரை கிடைக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment