அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்க முடியாது என்ற தகவல் பொய்யானது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை என்றாலும், சவாலை நிர்வகித்தல், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் நலன்புரிச் செலவுகள் மற்றும் அத்தியவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு அந்நிய செலாவணி வழங்குதல் ஆகிய மூன்று முக்கிய விடயங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளில் எந்த விதமான வெட்டும் ஏற்படாது எனவும் சேமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment