இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன இலச்சினையில் தமிழ் வேண்டும் - தனி நபரின் போராட்டத்திற்கு வெற்றி - News View

About Us

About Us

Breaking

Friday, October 7, 2022

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன இலச்சினையில் தமிழ் வேண்டும் - தனி நபரின் போராட்டத்திற்கு வெற்றி

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் இலச்சினை மீண்டும் மும்மொழியிலும் காணப்பட வேண்டும் என கோரி தனி நபராக போராட்டத்தில் ஈடுபட்ட தனுஹ ரனஜன்ஹ என்ற நபர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

உள்ளக வெளி அழுத்தங்களை தொடர்ந்து இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் இலச்சினை மீண்டும் மூன்று மொழிகளும் இடம்பெறும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது என அதன் பிரதி முகாமையாளர் அஜந்த செனிவரட்ண தெரிவித்துள்ளார்.

ஒன்பது மாதங்களிற்கு முன்னர் இந்த இலச்சினை மாற்றப்பட்டது நேற்று நாங்கள் மீண்டும் பழைய இலச்சினைக்கு திரும்பியுள்ளோம் என தெரிவித்துள்ள அவர் எங்களுடன் தொடர்புபட்டுள்ள பலர் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்தே இந்த மாற்றம் இடம்பெற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான வேண்டுகோள் விடுக்கப்பட்டது இதனை தொடர்ந்து பல இலச்சினையையும் இன ஐக்கியத்தையும் மீண்டும் கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழி மாத்திரம் காணப்படும் விதத்தில் மாற்றப்பட்ட கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட இலச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பழைய இலச்சினையை மீண்டும் கொண்டுவரக் கோரியும் தனி நபராக போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தனுஹ ரனன்ஜக என்பவரே இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னால் தனி நபராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இலச்சினை மாற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர் ஒரு வார்த்தையை உரக்க பேசாமால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார். நான் வெற்றி பெற்றுள்ளேன் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு வெளியே பதாகையொன்றுடன் பல மணி நேரமாக காணப்பட்ட இவர் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இலச்சினையில் தமிழும் இடம்பெற வேண்டும் என தனி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை நான் அறிவேன் என பிரதி முகாமையாளர் அஜந்த செனிவரட்ண தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment