குருந்தூர் மலை விவகாரத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுள்ளன - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 7, 2022

குருந்தூர் மலை விவகாரத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுள்ளன - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

குருந்தூர் மலை விவகாரத்தில் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுள்ளன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (7) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் குறுந்தூர் மலை தொடர்பில் சில உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. அங்கு சட்டவிரோத நிர்மாணங்கள் இடம்பெறுகின்றது.

சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதிமொழிகளை வழங்கி அங்கு எந்தவிதமான மேலதிக கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருடான கலந்துரையாடல்களின் பின்னரே இது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை மீறி அங்கு அளவீடுகள் நடக்கின்றன. நீங்கள் நம்பகத்தன்மை தொடர்பில் கதைக்கின்றீர்கள். அந்த நம்பகத்தன்மை மீறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது. அது தொடர்பில் அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளார். அவை பற்றி சபாநாயகர் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment