பாராளுமன்றத்தை கூட்டி மக்கள் நிதியை வீணடிப்பது முற்றிலும் தவறானது - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Thursday, October 6, 2022

பாராளுமன்றத்தை கூட்டி மக்கள் நிதியை வீணடிப்பது முற்றிலும் தவறானது - விமல் வீரவன்ச

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்,எம்.வசீம்)

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கூட்டி மக்கள் நிதியை வீணடிப்பது முற்றிலும் தவறானது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரின் நிதியா பாராளுமன்றில் செலவு செய்யப்படுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (6) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் இன்று (06) அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டது, நாங்களும் விவாதத்துக்கு தயாராக வந்தோம்.

ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து அந்த உரை மீதான விவாதத்தை நடத்த ஆளும் தரப்பினர் தீர்மானித்தனர். பாராளுமன்ற அமர்வுக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 90 இலட்சம் ரூபா செலாவாகுகிறது.

22ஆவது திருத்தச் சட்ட மூலம் வரைபு மீதான விவாதத்தை நடத்தாவிடின் பாராளுமன்றத்தை ஒத்தி வையுங்கள் அதனை விடுத்து ஜனாதிபதியின் உரை மீதான பொய்யான விவாதத்தை நடத்துவது பயனற்றதாகும்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் பசி கொடுமையால் மயங்கி விழும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள போது பாராளுமன்றத்தை கூட்டி மக்கள் நிதியை வீண் விரயமாக்குவது முற்றிலும் தவறானது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரின் நிதியா பாராளுமன்றில் செலவு செய்யப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment