தாய்லாந்தில் உள்ள முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையமொன்றிற்குள் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
தாய்லாந்தின் வட கிழக்கு மாவட்டமான நாங் புவா லம்புவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவத்தில் இதுவரை இரண்டு வயது குழந்தை உட்பட 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிதாரி தாக்குதல் நடத்திய பிறகு தன்னைதானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர் போதைப் பழக்கம் காரணமாக கடந்த வருடம் காவல்துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்.
என்ன நடந்தது?
துப்பாக்கிதாரி முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்துக்கு வந்த பிறகு தனது குழந்தை இல்லை என்றவுடன் ஆத்திரம் அடைந்துள்ளார்.
அதன் பிறகு அவர் துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார். பின் தனது வாகனத்தை செலுத்தி கூட்டத்தில் மோதியுள்ளார். அதன் பிறகு வீட்டுக்கு சென்று தனது மனைவி மற்றும் குழந்தையை கொன்றுள்ளார் என பொலிஸ் செய்தி தொடர்பாளர் பைசன் லுசோம்பூன் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை நேரில் கண்ட 31 வயது பவீனா புரிச்சன் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசுகையில், தாக்குதலுக்கு பிறகு துப்பாக்கிதாரி கண்மூடித்தனமாக வாகனத்தை செலுத்தியதை தான் கண்டதாக தெரிவித்தார்.
"வீதியில் பிறர் மீது மோத வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் வாகனத்தை செலுத்தினார்." என்கிறார் பவீனா. அவரின் வாகனம் என்னை நோக்கி வரும்போது நான் தப்பித்துவிட்டேன் என்றும் பவீனா கூறுகிறார்.
மேலும் தாக்குதல் நடத்தியவர், போதைப் பொருளுக்கு அடிமையானவராக உள்ளூரில் அறியப்படுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment