சோளப் பயிர்ச் செய்கைக்கு 175,000 மெற்றிக் தொன் யூரியா விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 4, 2022

சோளப் பயிர்ச் செய்கைக்கு 175,000 மெற்றிக் தொன் யூரியா விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பெரும்போக விவசாயத்தின் சோளப் பயிர்ச் செய்கைக்கு தேவையான 175,000 மெற்றிக் தொன் முதற்கட்ட யூரியா உரம் மூன்று மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவிக்கிறது.

மொனராகலை, குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான யூரியா விநியோக நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய, குறித்த 3 மாவட்டங்களுக்கான முதல் கட்ட யூரியா உரமானது, கொமர்ஷல் உர நிறுவனத்தின் ஊடாக விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மொனராகலை மாவட்டத்திற்கு 75,000 மெட்றிக் டொன் யூரியா உரமும், குருநாகல் மாவட்ட கு 25,000 மெட்றிக் டொன் யூரியா உரமும், அநுராதபுரம் மாவட்டத்திற்கு 75,000 மெற்றிக்தொன் யூரியா உரமும் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்தாக விவசாய அமைச்சு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment