இந்தியாவில் பந்திப்பூர் வனப் பகுதியில் ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்துள்ளது.
குறித்த யானை 'போகேஸ்வரன்', 'கபினி' என பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளது.
ஆண் யானையான போகேஸ்வரன் மிக நீளமான தந்தங்களை உடையது. அதாவது இது, ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் உடைய காட்டு யானை ஆகும். அதன் தந்தங்கள் சுமார் 7 அடி முதல் 8 அடி வரை இருக்கும்.
தும்பிக்கை போன்று தரையில் படும் அளவுக்கு அதன் தந்தங்கள் இருக்கும்.
மிகவும் சாதுவான இந்த போகேஸ்வரன் யானை, அடிக்கடி பந்திப்பூர் வனப் பகுதியில் சபாரி பாதையில் வந்து நிற்கும். இந்த யானை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் அமைதியாக செல்லும் குணம் கொண்டது.
பந்திப்பூர் வனப் பகுதியில் சபாரி வருபவர்களுக்கு இந்த போகேஸ்வரன் யானை காட்சி அளித்து வந்தது. அந்த யானை சுற்றுலா பயணிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் இருந்துள்ளது.
இந்நிலையில் 68 வயதான போகேஸ்வரன் யானை, பந்திப்பூர் வனப் பகுதியில் நேற்று உயிரிழந்துள்ளது.
இதையடுத்து கால்நடை வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வனத்துறையினர், யானையின் 2 தந்தங்களை வெட்டி எடுத்துள்ளனர்.
இதையடுத்து அதேப்பகுதியில் யானையின் உடலை கபினி அணை அருகே குழித்தோண்டி புதைத்தனர். பின்னர் வனத்துறையினர் காட்டு யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வருத்தம் அளிக்கிறது இகு றித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 68 வயதான இந்த போகேஸ்வரன் யானை, உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது.
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட இந்த யானை உயிரிழந்தது வருத்தத்தை அளிக்கிறது. நீளமான தந்தங்களால் உணவு எதுவும் சாப்பிட முடியாமல் அந்த யானை உயிரிழந்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment