யானைகளின் இருப்பிடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மத்தள விமான நிலையத்தால் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டம் - அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா - News View

About Us

About Us

Breaking

Monday, June 13, 2022

யானைகளின் இருப்பிடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மத்தள விமான நிலையத்தால் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டம் - அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா

(இராஜதுரை ஹஷான்)

யானைகளின் இருப்பிடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மத்தள விமான நிலையம் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது.மத்தள விமான நிலையத்தை மாற்று தேவைகளுக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

மத்தள விமான நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யானைகளின் இருப்பிடத்தில் மத்தள விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் யானை - மனித மோதல்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

விமான நிலையத்தை அண்மித்து தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு வேலியை ஸ்தாபிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையம் மாதாந்தம் 100 மில்லியன் நட்டத்தை எதிர்கொள்கிறது. நாட்டில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அவசியம் என்ற காரணத்தினால் விருப்பமில்லாத நிலையில் இந்த விமான நிலையத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை காணப்படுகிறது.

நட்டத்தில் இயங்கும் மத்தள விமான நிலையத்தை மாற்று நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

விமான சேவைகளுடனான இதர விடயங்களை முன்னெடுப்பது குறித்து சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் அச்சம் கொண்டுள்ளார்கள்.

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் விருத்தியடைந்து, பொருளாதாரம் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்ததும் மத்தள விமான நிலையம் குறித்து உரிய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.

No comments:

Post a Comment