“கோட்டா கோ கம” முகவரிக்கு வந்த முதல் கடிதம் ! சிகையலங்கார நிலையமும் திறப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 20, 2022

“கோட்டா கோ கம” முகவரிக்கு வந்த முதல் கடிதம் ! சிகையலங்கார நிலையமும் திறப்பு

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இடம்பெறும் “கோட்டா கோ கம” மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 42 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.

இந்நிலையில், ‘கோட்டா கோ கம’ என முகவரியிடப்பட்டு முதன்முறையாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

போராட்டக்களத்திலுள்ள ஏற்பாட்டாளர் குழுவின் நீதிப் பிரிவிற்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதேவேளை, கோட்டா கோ கமவில் சிகையலங்கார நிலையமொன்றும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment