
இன்று (20) முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
1. நிமல் சிறிபால டி சில்வா
துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்
2. கலாநிதி சுசில் பிரேமஜயந்த
கல்வி அமைச்சர்
3. கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல
சுகாதார அமைச்சர்
4. கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
5. ரமேஷ் பத்திரண
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
6. நளின் பெனாண்டோ
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
7. டிரான் அளஸ்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
8. ஹரின் பெனாண்டோ
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
9. மனூஷ நாணயக்கார
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் இதற்கு முன்னர் 4 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
வெளிவிவகார அமைச்சர்
2. தினேஷ் குணவர்தன
பொது நிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர்
3. பிரசன்ன ரணதுங்க
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
4. கஞ்சன விஜேசேகர
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்
No comments:
Post a Comment