நாளையதினம் நடைபெறவுள்ள நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அனைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்களால் நடத்தப்படவுள்ள ஹர்த்தாலில் அனைத்து ஊழியர்களும் பங்கேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் தொழிலாளர் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment