நாளையதினம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள ஊழல் மயமான அரசியல் அமைப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்து மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்திற்கும் இடையில் நேற்று (04) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலிலேயே ஹர்த்தாலுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாளை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அமைதியான எதிர்ப்புப் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். அனைத்து வைத்தியர்களும் கறுப்புப் பட்டி அணிந்து பணிபுரிவார்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தற்போதுள்ள நெருக்கடி மற்றும் அதன் தீர்வு பற்றிய கையேடுகளை விநியோகித்தல், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment