நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் நாளை (06) முதல் சில சேவைகளை விலக்கிக் கொள்வதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அனைத்து சர்வதேச விமான நிலையங்களின் விசேட அதிதிகள் (VIP) மற்றும் வணிக ரீதியாக முக்கியமான நபர்களின் (CIP) முனையங்களின் செயற்பாடுகளை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நிறுத்தவுள்ளதாக குறித்த சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒரு தீர்வு எட்டப்படும் வரை விஐபி மற்றும் சிஐபி முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து அவர்கள் விலக முடிவு செய்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் பல தொழிற்சங்கங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment