இலங்கையில் மீண்டும் அதிகரித்தது எரிபொருள் விலைகள் - News View

About Us

About Us

Breaking

Monday, May 23, 2022

இலங்கையில் மீண்டும் அதிகரித்தது எரிபொருள் விலைகள்

இன்று (24) அதிகாலை 3.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 338 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் புதிய விலை 420 ரூபாவாகும்.

ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 337 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் புதிய விலை 450 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 400 ரூபா வரையிலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 445 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுமென எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா ஐஓசி (LIOC) நிறுவனமும் இன்று (24) முதல் அதே அதிகரிப்பின் அடிப்படையில் விலைகளை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. <<< இறுதியாக LIOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு விபரம்>>>

குறித்த விலை அதிகரிப்புகள், எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய அமைச்சரவையின் அனுமதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் கணக்கில் இது தொடர்பில் அறிவித்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விலை அதிகரிப்பானது எரிபொருளின் வெளிநாட்டிலிருந்தான இறக்குமதி, அதனை கப்பலிலிருந்து இறக்குதல், எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகித்தல் மற்றும் வரிகள் ஆகிய அனைத்து செலவுகளையும் உள்ளடக்கப்பட்டது என, அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் எவ்வித இலாபங்களும் கணக்கிடப்படவில்லை எனவும் இலாபங்கள் சேர்க்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது மேற்கொண்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பானது பொதுமக்கள் மீதான பாரிய சுமையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளதோடு, இது தங்களுக்கு சுமைக்கு மேல் சுமையெனவும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment