இலங்கைக்கு உணவு உதவிகளுக்காக 1.5 மில்லியன் டொலர்களை வழங்குகிறது ஜப்பான் - News View

About Us

About Us

Breaking

Friday, May 20, 2022

இலங்கைக்கு உணவு உதவிகளுக்காக 1.5 மில்லியன் டொலர்களை வழங்குகிறது ஜப்பான்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உதவிகளை வழங்க இலங்கைக்கு ஐப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது.

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதற்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூபா 600 மில்லியன்) வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் இன்று அறிவித்தது.

இந்த நிதியானது ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தினால் குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு உதவி வழங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான ஜப்பானின் பதில் தூதுவர் கட்சுகி கொட்டாரோ, “நாடு முழுவதும் உள்ள சுமார் 15,000 நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கும் 380,000 பாடசாலை மாணவர்களுக்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான வலுவூட்டப்பட்ட அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர உதவியை வழங்கும் என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜப்பான் கடந்த 10 ஆண்டுகளாக பாடசாலை உணவுத் திட்டத்திற்காக மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜப்பானில் தயாரிக்கப்பட்ட தகரத்திலடைக்கப்பட்ட மீன்களை வழங்குவதன் மூலம் சிறுவர்களுக்கு முக்கிய புரதத்தை வழங்கி வருகிறது.

இந்த மனிதாபிமான உதவியானது பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை மக்களுக்கு உணவு அணுகல் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த உதவும் என நம்புகிறோம்.” என இலங்கைக்கான ஜப்பானின் பதில் தூதுவர் கட்சுகி கொட்டாரோ தெரிவித்தார்.

பலவீனமடைந்து வரும் பொருளாதாரத்தால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் உணவு விலைகள் அதிகரிப்பு, குடும்பங்கள் மலிவு விலையில் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்கு தடையாக உள்ளது.

தொற்றுநோய்க்கு முன்பே சிறுவர்கள் மற்றும் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் அதிகமாக இருந்தது. ஆரம்ப வயது குழந்தைகளில் சுமார் 40 சதவீதம் பேர் தங்கள் உயரத்திற்கு மிகவும் உடல் எடை குறைந்தவர்களாக இருக்கின்றனர்.

இலவச பாடசாலை உணவின் மூலம் குழந்தைகள் தங்கள் தினசரி ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவையின் குறிப்பிடத்தக்க பகுதியை தொடர்ந்து பெறுவதை உறுதிசெய்ய, உலக உணவுத் திட்டம் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்திற்காக அரிசியை வாங்குவதற்கு பங்களிப்பைப் பயன்படுத்தும்.

மேலும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை விநியோகிக்கவும் உலக உணவுத் திட்டம் செயற்படும்.

இலவச பாடசாலை உணவின் மூலம் குழந்தைகள் தங்கள் தினசரி ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவையின் குறிப்பிடத்தக்க பகுதியை தொடர்ந்து பெறுவதை உறுதி செய்ய உலக உணவுத் திட்டம் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்திற்காக அரிசியை வாங்கவதற்கு பங்களிப்பைப் பயன்படுத்தும்.

மேலும் பாதிக்கப்படக் கூடிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை விநியோகிக்கவும் உலக உணவுத் திட்டம் செயற்படும்.

“மிகவும் தேவைப்படுபவர்களுக்கு சரியான ஊட்டச்சத்தைப் பெறுவது இன்றைய பொருளாதார வீழ்ச்சியின் நீண்டகால விளைவுகளைத் தணிக்க உதவும் ”என்று இலங்கையின் உலக உணவுத் திட்டத்தின்  பிரதிநிதியும் வதிவிடப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்தீக்கி கூறுகிறார்.

“இந்த நெருக்கடியான நேரத்தில் ஜப்பானின் பங்களிப்புக்கு உலக உணவுத் திட்டம் மிகவும் நன்றியுடையது. இலங்கை மக்களுடன் ஜப்பானின் பெருந்தன்மை மற்றும் ஒற்றுமைக்காக நாங்கள் நன்றி கூறுகிறோம்.

மிகவும் அவசரமான தேவைகளை அடையாளம் காணும் மதிப்பீடுகளின் அடிப்படையில் அவசரகால உணவு உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு உலக உணவுத் திட்டம் வழங்கும்” என அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment