டீசல் விநியோகம் குறைவடைந்துள்ள போதிலும் அதிகூடிய எண்ணிக்கையிலான பஸ்கள் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
நாளாந்தம் சேவையில் இணைக்கப்படும் 5,000 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் தற்போது வழமை போன்று நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளரான பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 1,000 பஸ்கள் சேவையில் உள்ள அதேவேளை பஸ் சேவைகள் குறையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சில நிரப்பு நிலையங்களில் போதிய எரிபொருள் விநியோகம் இல்லாத நிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் களஞ்சியசாலைகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருக்கிறது.
எவ்வாறாயினும், தேவை குறைவாக உள்ள சில பகுதிகளில் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பு உரிய நேரத்தில் கிடைக்காவிட்டால், சேவையில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியிருக்கும்.
பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் பஸ்கள் இயங்குவதை உறுதி செய்ய இலங்கை போக்குவரத்து சபை தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment