பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதாக வௌியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவரது வீட்டில் அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேசியுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தமது பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்ய முன்வந்ததாகவும் அதை பின்னர் கோட்டாபய ஏற்றுக் கொண்டதாகவும் சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின.
இவ்வாறான நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியினை இதுவரை இராஜினாமா செய்யவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதியுடனான பிரதமரின் சந்திப்பு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
No comments:
Post a Comment